டெல்லி: 18வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார் மருத்துவமனை வசூலிக்கும் கட்டண விவரத்தை அ்றிவித்துள்ளது.

அதன்படி பூஸ்டர் டோஸ் தகுதி பெரும் நபருக்கு, தடுப்பூசி விலையுடன் சேவைக்கட்டணமாக  ரூ.150 மட்டுமே சேவைக்கட்டணமாக வசூலிக்க வேண்டும் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் அசோக் பூஷன் அறிவித்து உள்ளார்.

(அதாவது தடுப்பூசி பூஸ்டர் டோஸ் விலை ரூ.600 + வரி (5%) மற்றும் தடுப்பூசி போடுவதற்கான சேவை கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.800 வரை வசூலிக்கப்படலாம் / பெரிய மருத்துவமனைகளில் ரூ.1000 வரை வசூலிக்கடலாம்)

கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசியில் விலையை சீரம் நிறுவனம் ஏற்கனவேஅறிவித்து உள்ளது. அதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி பூஸ்டர் டோஸின் விலை ரூ. 600 + வரி என்றும்,  கோவோவேக்ஸ் தடுப்பூசியின் விலை ரூ.900 + வரி என்றும், என சீரம் நிறுவன இயக்குனர் ஆதார் பூனாவல்லா  தெரிவித்துள்ளார். இந்த புதிய விலைகள் ஏப்ரல் 10நதேதி முதல் அமலுக்கு வருவதாக சீரம் நிறுவனம் அறிவித்து உள்ளது. மேலும், மருத்துவமனைகளுக்கு  தள்ளுபடி விலையில் ஜாப் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அரசு தடுப்பூசி முகாம்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அனுமதி வழங்கி உள்ளது. அத்துடன், 18வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, 2-வது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கடந்தவர்களுக்குத்தான்  பூஸ்டர் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளதுடன், தனியார் மருத்துவ மனைகள் சேவைக் கட்டணமாக அதிகபட்சமாக ரூ.150 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது, தடுப்பூசி மருந்தின் விலையிலிருந்து அதிகபட்சமாக ரூ.150 மட்டுமே சேவைக்கட்டனம் வசூலிக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு எந்தவிதமான முன்பதிவும் தேவையில்லை. ஏற்கெனவே கோவின் தளத்தில் பதிவு செய்து 2 டோஸ்களை முடித்திருப்பதால் புதிதாக பதிவு செய்யத்தேவையில்லை. ஆனால் தனியார் மருத்துவமனைகள் கோவின் தளத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா அல்லதுநேரடியாக மருத்துமனைக்கு வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என்பதை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

விற்பனைக்கு வருகிறது கோவிஷீல்டு தடுப்பூசி – பூஸ்டர் டோஸின்  விலை ரூ. 600 + வரி!