டில்லி,
குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான (2017) பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவரால் வழங்கப்படும். இந்தியாவின் பெருமைமிக்க விருதுகளில் பத்மஸ்ரீ அவார்டும் ஒன்று.
பத்ம விருதுகள் 3 வகையாக உள்ளது. அவை பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ . ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவையொட்டி பத்ம அவார்டுகள் அறிவிக்கப்படுகிறது.
பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் விபரம் :
பாடகர் கைலாஷ் கர், பாடகி அனுராதா பட்வால், ஓய்வுபெற்ற அதிகாரி டி.கே.விஸ்வநாதன், இந்தி எழுத்தாளர் நரேந்திர கோலி, பத்திரிக்கையாளர் பாவனா சோமாய்யா, பத்திரிக்கையாளர் ஹச்.ஆர்.ஷா, முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கன்வால் சிபல்,
விளையாட்டு விராங்கனை தீபா கர்மாக்கர், விகாஸ் கவுடா, ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், சமூக சேவகர் அனுராதா கொய்ராலா, எழுத்தாளர் இலி அகமது, கிரிக்கெட் வீரர் வீராத் கோலி, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு,
நடிகர் சாது மேகர், சண்டிகர் பேராசிரியர் ஹர்கிஷன் சிங்.நடன கலைஞர் பாசந்தி பிஸ்த், மலையாள கவிஞர் பி.குன்ஹிராமன் நாயர், சுற்றுப்புற ஆர்வலர் டாக்டர் எஸ்.வி.மபுஸ்கர், ஓவியர் திலக் கீதை, பீகார் ஓவியர் பயோயா தேவி, மணிப்பூர் இசையமைப்பாளர் எல்.பிரேந்திர குமார் சிங், சித்தார் இசைக் கலைஞர் உஸ்தாத் இம்ராத் கான், நாட்டுப்புற பாடகர் சுக்ரி பூமா கவுடா, ஜார்கண்ட் நாட்டுப்புற பாடகர் முகுந்த் நாயக், மலையாள கவிஞர் அக்கிதம், காஷ்மீர் பல்கலை., முன்னாள் பேராசிரியர் காசிநாத் பண்டிட், மிருதங்க வித்வான் டி.கே.மூர்த்தி, களரி பயிற்சியாளர் கிரானி.