டெல்லி: மத்தியஅரசு 2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்து உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட 26 பல்துறை சார்ந்தவர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு 26 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் பத்ம ஸ்ரீ விருதை பெறுகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் சமூகப்பணிக்காக (விலங்குகள் நலன்) பத்ம ஸ்ரீ விருதை பெறுகின்றனர்.
மத்திய அரசால் பல்வேறு துறை வல்லுநர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை (ஜன. 26) 74வது இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுக்கு பல துறைகளை சார்ந்த வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1954ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிவிலியன் விருதுகள், பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும். மேலும் இந்த விருதுகள் அவர்கள் சார்ந்த துறையில் ‘வித்தியாசமான பணியை’ அங்கீகரிக்க முயல்கின்றன. மேலும் அனைத்து துறைகளிலும்/ பணிகளிலும் சிறந்த மற்றும் விதிவிலக்கான சாதனைகள்/சேவைக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்றவைக்கு வழங்கப்படுகின்றன.
இதில், நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண், ORS மருந்து பயன்பாட்டில் முன்னோடியாக இருந்து, மறைந்த திலீப் மஹாலனாபிஸூக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் ஐந்து கோடிக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றியதாக மதிப்பிடப்பட்ட ஓரல் ரீஹைட்ரேஷன் சிஸ்டம் அல்லது ORSஇன் பரவலான பயன்பாட்டிற்கு வழிவகுத்தவர், திலீப்.
1971 வங்காளதேச விடுதலைப் போரின் போது அகதிகள் முகாம்களில் பணியாற்றிய போது திலீப் மஹாலனாபிஸ் ORS இன் செயல்திறனை நிரூபித்ததாக மத்திய அரசு கூறியது. சமாஜ்வாடி கட்சியின் மறைந்த தலைவரான முலாயம் சிங் யாதவுக்கு பொது விவகாரங்களுக்கான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஹுசைன் கலைத் துறையில் பத்ம விபூஷண் பெற்றார். வணிகம் மற்றும் தொழில் துறைக்காக கே.எம்.பிர்லாவுக்கு பத்ம பூஷன் விருதும், சமூகப் பணிக்காக மூர்த்தி பத்மபூஷன் விருதும் பெற்றனர். தொடர்ந்து, பல தரப்பினர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை குறித்து இங்கு காண்போம்.
ஜல்பைகுரி மாவட்டத்தின் டோட்டோபாரா கிராமத்தைச் சேர்ந்த டோட்டோ (டெங்கா) மொழிப் பாதுகாப்பாளரான தானிராம் டோட்டோ, இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் (டெங்கா மொழி) பத்மஸ்ரீ விருதைப் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த 80 வயதான மொழியியல் பேராசிரியரான பி ராமகிருஷ்ண ரெட்டி, இலக்கியம் மற்றும் கல்வி (மொழியியல்) துறையில் பத்ம விருது பெறுவார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் சமூகப்பணிக்காக (விலங்குகள் நலன்) பத்ம ஸ்ரீ விருதை பெறுகின்றனர்.
விருது பெறுபவர்களின் முழுப் பட்டியல்
பத்ம விபூஷன்
திலீப் மஹாலனாபிஸ் (வயது: 87) துறை: மருத்துவம் (குழந்தை மருத்துவம்) மாநிலம்: மேற்கு வங்காளம்
பத்மஸ்ரீ
- ரத்தன் சந்திர கர் (வயது: 66 ), துறை: மருத்துவம் (மருத்துவர்) மாநிலம்: அந்தமான் & நிக்கோபார்
- ஹிராபாய் லோபி (வயது: 62 வயது), துறை: சமூகப்பணி (பழங்குடியினர்), மாநிலம்: குஜராத்
- முனீஸ்வர் சந்தர் தாவர், மத்திய பிரதேசம்
- ராம்குய்வாங்பே நியூமே, அசாம்
- வி பி அப்புக்குட்டன் பொடுவாள் ( 99 வயது), கேரளா
- சங்குராத்திரி சந்திர சேகர், ஆந்திரப் பிரதேசம்
- வடிவேல் கோபால்
- மாசி சடையன். தமிழ்நாடு
- துலா ராம் உப்ரீதி, சிக்கிம்
- நெக்ரம் ஷர்மா. இமாச்சல பிரதேசம்
- ஜானும் சிங் சோய். ஜார்க்கண்ட்
- தனிராம் டோட்டோ, மேற்கு வங்காளம்
- பி ராமகிருஷ்ண ரெட்டி. தெலுங்கானா
- அஜய் குமார் மாண்டவி. சத்தீஸ்கர்
- ராணி மச்சையா. கர்நாடகா
- கே சி ரன்ரெம்சங்கி. மிசோரம்
- ரைசிங்போர் குர்கலங். மேகாலயா
- மங்கள காந்தி ராய். மேற்கு வங்காளம்
- மோவா சுபோங். நாகாலாந்து
- முனிவெங்கடப்பா. கர்நாடகா
- தோமர் சிங் குன்வர். சத்தீஸ்கர்
- பரசுராம் கோமாஜி குனே. மகாராஷ்டிரா
- குலாம் முஹம்மது ஜாஸ். ஜம்மு & காஷ்மீர்
- பானுபாய் சித்தாரா. குஜராத்
- பரேஷ் ரத்வா. குஜராத்
- கபில் தேவ் பிரசாத், பீகார்