சென்னை:  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மேகாலாயயாவில், முதல்கட்டமாக  55 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை  காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது.

சட்டமன்ற காலம் முடிவடையும்,  நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவைகளிலும்  தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தலா 60  சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட இந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் மார்ச் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. மேகாலயாவில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள என்பிபி கட்சியின் கான்ராட் சங்மா முதல்வராக உள்ளார். நாகாலாந்தில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள என்டிபிபி கட்சியின் நெப்யூ ரியோ முதல்வராக உள்ளார்.

இந்த மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக போராடி வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த மாநிலங்களில்,  காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பலமாக உள்ளது. எனவே இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறுமா அல்லது எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் வெல்லுமா என்பது தற்போதைய எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.

மேகாலயா சட்டப்பேரவைக் காலம் மார்ச் 15ம் தேதி முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து, மேகாலயாவுங்ககு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கல் ஜன.31-ந்தேதி தொடங்குகிறது. வேட்பு மமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம்தேதி, பிப்ரவரி 8ம்தேதி வேட்புமனு பரிசீலனையும் நடக்கும். 10ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசிநாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், 60 சட்டப்பேரவை தொகுதிகளைகொண்ட மேகாலயாவில்,  55 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் சிட்டிங் எம்பி வின்சென்ட் எச் பாலா சுட்ங்கா சைபுங்கில் களமிறங்குகிறார்.