டெல்லி: நாட்டின் 77வது குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், நடிகர் மாதவன், ஓய்வுபெற்ற ஐஜி விஜயகுமார் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
மேலும் நடிகர் தர்மேந்திரா, கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனுக்கு மரணத்துக்குப் பின் பத்ம விபூஷண், நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது
ஜேஎம்எம் நிறுவனர் ஷிபுசோரன், பிஜேபி தலைவர் விகே மல்ஹோத்ரா ஆகியோருக்கு மரணத்திற்குப் பின் பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 பத்ம விபூஷன், 13 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ உட்பட 2026 ஆம் ஆண்டிற்கான 131 பத்ம விருதுகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பத்ம விருதுகள் பெறும் நபர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் இருந்து #PadmaBhushan விருது பெறத் தேர்வாகியிருக்கும் திரு. ராமசாமி பழனிசாமி, திரு. மயிலானந்தன் ஆகியோருக்கும் – #PadmaShri விருது பெறத் தேர்வாகியிருக்கும் திரு. எச்.வி. ஹண்டே, திருமிகு சிவசங்கரி, திருமிகு காயத்ரி பாலசுப்ரமணியன் & திருமிகு ரஞ்சனி பாலசுப்ரமணியன், திரு. ராமசாமி, திரு. விஜயகுமார், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், திரு. புண்ணியமூர்த்தி நடேசன், ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், திரு. திருவாரூர் பக்தவத்சலம், திரு. வி. காமகோடி ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது துறைகளில் தாங்கள் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து, சமூகத்துக்குச் சேவையாற்றிட இந்த அங்கீகாரம் ஊக்கத்தினை வழங்கிடும் என நம்புகிறேன்! #PadmaBhushan பெறவுள்ள டென்னிஸ் வீரும் எனது நண்பருமான p விஜய் அமித்ராஜ் திரைக்கலைஞர் மும்முக்க, நடிகர் மாதவன் ஆகியோருக்கு எனது சிறப்பு வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, வர்த்தகம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனித்துவமான மற்றும் சிறப்பான சாதனைகள் அல்லது சேவைகளுக்காக மத்திய அரசின் சார்பில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய 3 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த விருதுகள் 1954ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த விருது ‘தனித்துவமான பணியை’யை அங்கீகரிக்க முற்படுகிறது மற்றும் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரம், பொது சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் புகழ்பெற்ற மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவைக்காக வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு இனம், வேலை, பதவி அல்லது பாலினம் என எந்த பாகுபாடின்றி அனைவரும் தகுதியானவர்கள். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை.
குடியரசு தினத்தை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கும் புதுச்சேரியை சேர்ந்த ஒருவருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ரத்னா விருதுக்கு அடுத்தபடியாக பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது பத்ம விருதுகள். இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதாக பத்ம விபூஷண், மூன்றாவது உயரிய விருதாக பத்ம பூஷண் விருதும், நான்காவது உயரிய விருதாக பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்படுகின்றன. பிரதமர் அமைக்கும் பத்ம விருதுகள் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 5 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரைச் சேர்ந்த மிருதங்கக் வித்வானுகு பக்தவச்சலம், சேலத்தைச் சேர்ந்த ராஜஸ்பதி கலியப்ப கவுண்டர், நீலகிரியைச் சேர்ந்த ‘குறும்பா’ ஓவியர் ஆர்.கிருஷ்ணன், தஞ்சாவூரைச் சேர்ந்த கால்நடை மருத்துவ விஞ்ஞானி புண்ணியமூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழனிவேலுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம ஸ்ரீ
இதில், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் தமிழ்நாட்டில் இருந்து 12 பேருக்கும், புதுச்சேரியில் ஒருவருக்கு என மொத்தம் 13 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியன் (கலை), ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் (கலை), ஆர்.கிருஷ்ணன் (கலை), எச்.வி. ஹண்டே (மருத்துவம்), புண்ணியமூர்த்தி நடேசன் (மருத்துவம்), கே. ராமசாமி (அறிவியல் மற்றும் பொறியியல்), கே. விஜய்குமார் (சிவில் சர்வீஸ்), ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர் (கலை), சிவசங்கரி (இலக்கியம் மற்றும் கல்வி), திருவாரூர் பக்தவத்சலம் (கலை), வீழிநாதன் காமகோடி (அறிவியல் மற்றும் பொறியியல்) மற்றும் புதுச்சேரியை சேர்ந்த சிலம்ப கலைஞர் பழனிவேல் (விளையாட்டு) ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷன்
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சார்ந்த 13 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டை சேர்ந்த கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமிக்கு மருத்துவத்துக்கான விருதும், எஸ்.கே.எம். மயிலானந்தனுக்கு சமூக சேவைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா நடிகர் மம்முட்டிக்கு கலைக்கான பத்ம பூஷன் மற்றும் நடிகர் மாதவனுக்கு (மகாராஷ்டிரா) பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” பத்மஸ்ரீ விருது எனக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே குறிக்கிறது. ‘விக்சித் பாரத் 2047’ திட்டத்தை நோக்கி எனது முயற்சிகளை மேற்கொள்வேன். எனது சாதனைகள் அனைத்தும் கூட்டு முயற்சியால் நிகழ்ந்தவையே. இந்த சாதனை பயணத்தில் என்னுடன் பங்கேற்ற அனைவருக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
விருது பட்டியல்:
(முழு விவரம் காண கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்யவும்
[youtube-feed feed=1]