சென்னை: முதல்வர் ஸ்டாலின், நெல்லுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ள நிலையில், இன்றுமுதல் நெல்கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகள் அறுவடை செய்துள்ள நெல்மூட்டைகள் இன்றுமுதல் கொள்முதல் செய்யப்படஉ ள்ளது. 12ஆண்டுகளுக்கு இந்த ஆண்டு முதல் நெல் மூட்டைகளுக்கு தமிழகஅரசு ஊக்கத்தைதொகையை அதிகரித்து வழங்குவதாக சட்டப்பேரவையில் அறிவித்தது. அதன்படி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் பருவம் அக்டோபரில் தொடங்கி அடுத்த ஆண்டு செப்டம்பரில் முடியும். விவசாயிகளிடம் இருந்து இந்திய உணவு கழகம் சார்பில் நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. விவசாயிகளிடம் வாங்கப்படும் நெல்லுக்கு 100 கிலோ எடையான குவிண்டால் அடிப்படையில், மத்திய & மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குகிறது.

2021-22 நிதியாண்டில் குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவின்டாலுக்கு சன்ன ரக நெல்லுக்கு ஆயிரத்து 960 ரூபாய் எனவும், பொது ரகத்துக்கு ஆயிரத்து 940 ரூபாய் எனவும் மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரி வருகின்றனர்.

இதுகுறித்து ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு, விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. சட்டமன்ற பேரவையின் பட்ஜெட் மானிய கோரிக்கை விவாதத்தின்போது,  மாநில அரசின் ஊக்கத் தொகை 12 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்படுவ  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி, நடப்பு ஆண்டில் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு சன்ன ரகத்துக்கு 70 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், பொது ரகத்துக்கு 50-லிருந்து 75 ரூபாயாகவும் ஊக்கத் தொகை உயர்த்தப்படும் என்றும், இது அக்டோபர் 1ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்திருந்தார்.n

மேலும்,  மாநிலம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், சாகுபடி செய்யப்படும் நிலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், ஆன்ட்ராய்டு போன் மூலமாகவே பதிவு செய்யலாம் என்றும், அதன்பிறகு நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கான தேதி, விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  நிலையில், இன்று முதல் கொள்முதல் செய்யப்பட இருப்பதால், விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை உயர்வும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கோபியில் மழையில் நனைத்த 5,000 நெல் மூட்டைகள்! விவசாயிகள் கோபம்…