சென்னை: இந்தியாவின் புகழ்பெற்ற முன்னாள் தடகள வீராங்கணையான பி.டி.உஷாவிற்கு, சர்வதேச தடகள சம்மேளனம் வழங்கும்(ஐஏஏஎஃப்) ‘வெடரன் பின்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த 52வது ஐஏஏஎஃப் மாநாட்டில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

“ஐஏஏஎஃப் அமைப்பு மற்றும் அதன் தலைவர் செபஸ்டியன் கோ ஆகியோருக்கு இந்த விருது வழங்கி கவுரவித்ததற்காக எனது மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்கிற‍ேன். இந்தியாவில் தடகள விளையாட்டின் வளர்ச்சிக்கு நான் தொடர்ந்து பங்காற்றுவேன்” என்று பி.டி.உஷா டிவீட்டியுள்ளார்.

மேலும், டிவிட்டரில் தான் விருதுபெற்ற புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இவர் ஏற்கனவே 1983ம் ஆண்டில் அர்ஜுனா விருது மற்றும் 1985ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்.

கடந்த 1984ம் ஆண்டு நடந்த லாஸ்ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டவர்.