பசு மீதான மத்திய அரசின் அன்பு ஏட்டளவில் மட்டுமே உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.

INX மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குடும்பத்தார் மூலமாக தினந்தோறும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் சிதம்பரம் மேற்கொண்டுள்ள பதிவில், “பசுக்கள் மீதான மத்திய அரசின் அன்பு ஏட்டளவில் மட்டுமே உள்ளது. கால்நடைகளின் இனப்பெருக்கம் மற்றும் உற்பத்தியில் அரசின் அக்கறையின்மையை இது சுட்டிக்காட்டுகிறது” என்று தெரிவித்திருந்தார்.

வேலைவாய்ப்பு தொடர்பாக மற்றொரு பதிவில், “தற்போது நாட்டில் வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்பான கேள்விக்கு 50% மக்கள் மோசமாக உள்ளதாகவும் 30% பேர் மேலும் மோசமடையும் என்றும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வேலைவாய்ப்பின்மை மிகவும் கடினமாக உள்ளதை புரிந்துக்கொள்ள முடியும்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குடும்பத்தார் மூலமாக கருத்துக்களை பதிவிட்டு வருவது அரசியல் களத்தில் பரபரப்புகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.