இனி பிறக்கும் இந்திய பெண் குழந்தைகள் அனைவருக்கும் இலவச வைப்புத் தொகையாக ரூ..11000 செலுத்தப்படும்  ஆக்சி நிறுவனம் அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
oxxy
இந்தியாவின் முன்னனி ஹெல்த்கேர் நிறுவனமான ஆக்ஸி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
இந்தியாவில் இனி பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ரூ.11,000-ஐ வைப்புத் தொகையை ஆக்சி நிறுவனமே  செலுத்தும் ஒரு அதிரடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியப் பெண்கள் செய்த சாதனைகளை தொடர்ந்து பெண்குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.
ஆக்கி நிறுவனத்தின் இணைநிறுவனர்  ஷீத்தல் கபூர்  இதுகுறித்து கூறும்போது,
sheethal
ஆக்ஸி நிறுவனத்தின் கனவு இந்தியாவில் ஆரோக்கியமான பெண் சமுதாயத்தை படைக்க வேண்டும் என்பதும், பெண்கள் சமூகத்தில் உயர்வாக மதிக்கப்பட வேண்டும் என்பதுமாகும்.
ரியோ ஒலிம்பிக்கில் பெண்கள் செய்த சாதனைகளைத் தொடர்ந்து இத்திட்டத்தை அறிவிப்பதை பெருமையாகக் கருதுவதாகவும் அவர் கூறினார்.
இத்திட்டத்தில் கர்ப்பமுற்ற தாய்மார்கள் தங்களைப் பதிவு செய்து வைத்தாலே போதும். அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் பட்சத்தில் அவர்களுக்காக 11,000 வைப்புத் தொகையை ஆக்சி நிறுவனம் வழங்கி பாலிசியை தொடங்கி வைக்கும்.
இதில் பெற்றொருக்கு எந்த செலவும் இல்லை. அந்தப் பெண் குழந்தைக்கு வயது 18 ஆகும் போது பாலிசியும் முடிவடையும். அதன் பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இத்திட்டம் பொருந்தும்.
இத்திட்டத்தில் இணைந்த கர்பிணிப் பெண்களுக்கு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பல விழிப்புணர்வு கல்விகளையும் ஆக்ஸி வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் பெண் சிசு கொலைகளையும் வெகுவாக குறைக்கலாம் எனறு ஷீட்டல் கபூர் நம்பிக்கை தெரிவித்தார்.
நனறி:  http://timesofindia.indiatimes.com/india/Oxxy-to-make-a-fixed-deposit-of-Rs-11000-for-every-girl-child-born-in-India/articleshow/54395368.cms