யனாளர்களின் தனிப்பட்ட உரிமையில் பயனாளர்களுக்குத் தெரியாமலேயே பெறுவதில்  எல்லா பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பெற்றுவருகின்றன.ஆனால் இந்தியாவில் அதுபற்றி பெரும்பான்மையானோருக்கு தெரியாது. அவர்களுக்கு புதிய வசதிகளுடன் உள்ள போன். அவ்வளவுதான் தெரியும், ஆனால் இந்த செயல்பாடுகளால் பெரும் நிறுவனங்கள் வெகுவாக வருமானத்தை ஈட்டிவருகின்றன. ஒரு மனிதனுக்குத் இணையத்தில் தேடினால் அவர் தேடிய விபரங்களாகவே எல்லா விளம்பரங்களும் காட்டப்பெறும்.

ஒவ்வொரு பயனாளர்களின் தகவல்களும கூகிள் நிறுவனத்தில் குறைந்த பட்சம் 1 ஜிபியாவது சேமிக்கப்பட்டுவருவதாக தகவல் தெரிவிக்கின்றன. நாம் இணையத்தில் தேடியது, எங்காவது ஓட்டல்களுக்குச் சென்றால் அந்த இடத்தினை நினைவில் வைத்துக்கொண்டு மீண்டும் நியாபகப் படுத்துவது போன்ற செயல்பாடுகள் இங்கே அதிகம். குறிப்பாக நாம் செல்லும் இடங்களையும் கூகிள் நிறுவனம் சேமித்துவைக்கிறது.

இதனையடுத்து பல பாதுகாப்பு நிறுவனங்கள் தொடர்ச்சியாக இதை வலியுறுத்தியபின் கூகிள் நிறுவனம் நாம் செல்லும் இட விபரங்களை சேமிக்கவேண்டாமென்றால் அதற்கான வசதியை பயனாளருக்கு கொடுத்துள்ளது. எனவே நாம் செல்லும் இடங்களை சேமிக்கவேண்டாமென்று கொடுத்துவிட்டால் கூகிள் நிறுவனம் நம் பயணத்தை சேமிக்காது.

பயணவிபரங்களை சேமிக்கவேண்டாம் என்ற விருப்பத்தினை நீங்கள் உங்கள் கூகிள் கணக்கில் கீழ்கண்டவாறு கொடுக்கலாம்

முதலில் கீழேயுள்ள இணைப்பில் கிளிக் செய்து Activity controls என்ற பக்கத்திற்குச் செல்லவும்

https://myaccount.google.com/activitycontrols

2.என்ற இடத்தில் உள்ள வலது புறமிருக்கும் பொத்தானை இடது புறம் இழுத்துவிடவும். இவ்வாறு செய்தபின் சேவ் பொத்தானை சேமிக்கவும்

ஆனாலும் வேறு சில செயலிகள் உங்கள் தொடர்ந்து கண்காணிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

– செல்வமுரளி