கடந்த சில வருடங்களாகவே பேஸ்புக் பல பிரச்னைகளில் சிக்க தவிக்கிறது. முக்கியமாக Cambridge Analytica வின் 8.7 கோடி பயனாளர்களின் தகவல் திருட்டு, 15 லட்சம் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை பயனாளர்களின் அனுமதியில்லாமல் எடுத்த சேமித்தது, அதன் பேஸ்புக் செயலிகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடு என பல பிரச்னைகளோடு பேஸ்புக் போராடிவருகிறது, அதுமட்டுமல்லாமல் இந்தப் பிரச்னைகளுக்கு நஷ்டஈடாக பல மில்லியன் டாலர்களையும் கொடுத்துவருகிறது.
இந்நிலையில்தான் பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை இணக்க அதிகாரி ( chief compliance officer.) புதிய தனி உரிமை விதிகளை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்
பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருக்கும் அதன் நிறுவனர் திரு. மார்க் , பயனாளர்களின் நம்பிக்கை பெறுவதே எங்களில் முதன்மை இலக்காக இருக்கிறது, அதற்காக எங்கள் குழு கடுமையாக உழைத்துவருகிறது என்றும் அவர் தெரிவித்தார்
பயனாளர் தனி உரிமை விதிமுறை மீறீயதாக US FTC வழக்கில் இந்த வருடத்தின் பின்பாதியும் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-செல்வமுரளி