பொதுவாக பாம்புகளுக்கு இரண்டு கண்கள் மட்டுமே உண்டு. தலையின் இரு புறமும் உள்ள இருகண்கள் மூலமே பாம்பு தனது உணவுகளை வேட்டையாடி வருகிறது.

ஆனால், ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் 3 கண்கள் கொண்ட பாம்பினை கண்டுபிடித்துள்ளனர். இந்த பாம்பு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவின்  வடக்கு பகுதி பூங்கா மற்றும் வன விலங்குகள் அமைப்பு இந்த பாம்பின் புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளது.  இந்த பாம்பு கார்பெட் பைதான் வகையினை சேர்ந்தது என்றும் மார்ச் மாதத்தில்தான் இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த பாம்பை பிடித்த வன விலங்குகள் அமைப்பு, அதுகுறித்து ஆராய்ச்சி செய்துவந்த நிலையில்,  பாம்பு துரதிருஷ்டவசமாக இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய வன விலங்குகள் அமைப்பு, “இந்த 3 கண் பாம்பு நீண்ட காலம் வாழ்ந்துள்ளது. தற்போது அது உடல்நலம் குன்றியிருந்தநிலையில், அதை பிழைக்க வைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும்,  அதற்கு உணவளிக்க போராடியதாகவும், ஆனால், பாம்பு உணவு ஏதும் உண்ணாமல் இறந்துவிட்டது என்று தெரிவித்து உள்ளனர்.

இந்த பாம்பின் நெற்றியில் இருந்த 3வது கண் நன்றாக வேலை செய்ததாக தெரிவித்த  வனவிலங்கு  அதிகாரி  இயற்கையான மரபணு மாற்றமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

இந்த பாம்பின் புகைப்படத்துக்கு சமக வலைதளமான ஃபேஸ்புக்கில் இந்த பதிவில் 8,000 பேர் கமெண்ட் செய்துள்ளனர். 13,000 பேர் ஷேர் செய்துள்ளனர்.