வெலிங்டன்

நியுஜிலாந்து நாட்டின் பெண் பிரதமர் ஜெசின்டா ஆடர்னுக்கும் அவரது காதலர் கிளார்க் கேபோர்ட் க்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நியுஜிலாந்து நாட்டின் பெண் பிரதமரான ஜெசிண்டா ஆடர்ன் தனது நீண்ட நாள் காதலர் கிளார்க் கேபோர்ட் என்பவருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் நடந்த கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதல் நேரத்தில் ஜெசிண்டா இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுத்தார்.

இந்த நடவடிக்கைகள் மூலம் இவர் நியுஜிலாந்து நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் பாராட்டுக்களை பெற்றார். கேபோர்ட் ஒரு டிவி தொகுப்பாளர் ஆவார். 41 வயதாகும் அவர் இப்போது தங்கள் பத்து மாத மகளை கவனித்து வருகிறார். நியூஜிலாந்து பிரதமர் ஜெசிண்டாவுக்கு தற்போது 38 வயதாகிறது

கடந்த ஈஸ்டர் அன்று ஜெசிண்டாவுக்கும் கேபோர்டுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகள் பரவின. ஆனால் இதை ஜெசிண்டா மற்றும் கேபோர்ட் இருவரும் உறுதி செய்யவில்லை. அதே நேரத்தில் மறுக்கவும் இல்லை. நேற்று ஜெசிண்டாவின் அலுவலக செய்தி தொடர்பாளர் இந்த நிச்சயதார்த்த செய்தியை உறுதி செய்துள்ளார்.