சென்னை:

மிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் சென்னையில் இதுவரை (26-04-20 காலை11 மணி நிலவரம்)  கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலவாரியாக  நிலைப் பட்டியல் வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று 66 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில்  கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  1,821 ஆக உயர்ந்தது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 66 பேரில் 43 பேர் சென்னையைச்சேர்ந்தவர்கள். இதையடுத்து சென்னையில் மடடும் கொரோனா பாதிப்பு 495ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்திலேயே கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. அதபோல கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்னையில் ஷாகின்பாத் போராட்டம் நடத்திய ராயபுரம் பகுதியே முதலிடத்தில் உள்ளது. இந்த பகுதியில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. அதையடுத்து,  பெரம்பூர் அருகே உள்ள திரு.வி.க.நகரில் 80 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 64 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல்

[youtube-feed feed=1]