டெல்லி: தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ள  விவசாயிகளின் டிராக்டர் பேரணியை சீர்குலைக்கும் வகையில், வதந்திகளை பரப்ப, பாகிஸ்தானில் இருந்து  சுமார்  300 போலி கணக்குகள் தொடங்கி செயல்பட்டு வருவது அடையாளம் காணப்பட்டு உள்ளதாக டெல்லி காவல்துறை அறிவித்து உள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் 50 நாட்களை கடந்து போராடி வருகின்றனர்.  நாளை, குடியரசுத் தினத்தன்று 1 லட்சம் டிராக்டர்கள் மூலம் 100 கிலோ மீட்டர் தூரம் பேரணி நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதனால், டெல்ல்லி பரபரப்பாக காணப்படுகிறது. டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுத்து வந்த காவல்துறை தற்போது அனுமதி வழங்கி உள்ளது. மேலும், டிராக்டர் பேரணி நடைபெறும் பாதை இன்று முடிவு செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல் துறையின் உளவுப்பிரிவு சிறப்பு பிரிவு ஆணையர் தீபேந்திர பதக்,  போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு பின்னணியில் வெளிநாடுகளைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் உள்ளன. அவை, டிராக்டர் பேணியில் குழப்பத்தை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதை சைபர் கிரைம் கண்காணித்து வருவதாக தெரிவித்தவர், கடந்த 13ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை பாகிஸ்தான் 300 ட்விட்டர் கணக்குகள், விவசாயிகளை குறிவைத்து  தொடங்கப்பட்டுள்ளது, இந்த பக்கங்களில் டிராக்டர் பேரணி குறித்  தவறான தகவல்களை பரப்பப்பட்டு வருகிறது. அதுபோன்ற கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

மேலும்,  நாளை டெல்லி, குடியரசு தின அணிவகுப்பு முடிவடைந்த பின்னரே, விவசாயிகளின  டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிக்கப்படும் என்றவர், இப்பேரணியை அசம்பாவிதங்கள் ஏதுமின்றி நடத்துவது சவாலான பணி என்றதுடன், அமைதியாக நடத்த பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச காவல் துறையுடன் இணைந்து விரிவான திட்டத்தை வகுத்துள்ளதாகவும் தீபேந்திர பதக் கூறினார்.