5ஆண்டுகளில் 1கோடிக்கும் மேலான மரங்கள் அழிப்பு: பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்

Must read

டில்லி:

சாலை விரிவாக்கம் போன்ற பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவது குறித்து உறுப்பினரின் கேள்விக்கு பாராளுமன்றத்தில் மத்திய வனத்துறை அமைச்சகம் பதில் தெரிவித்து உள்ளது.

அதில்,  கடந்த 5 ஆண்டுகளில் 1,09,75,844 (1கோடியே, 9 லட்சத்து 75ஆயிரத்த 844 மரங்கள் அனுமதிப் பெற்று வெட்டப்பட்டுள்ளது என்று மத்திய வனத்துறை தெரிவித்து உள்ளது.

சுற்றுச்சூழலை பாதுக்காக்க மரங்களை வெட்டக்கூடாது என்று சமூக ஆர்வலரகள் கூக்குரலிட்டு வரும் வேளையில், மற்றொரு புறம் சாலை விரிவாக்கம் போன்ற பணிகளுக்காக மரங்கள், வனங்களை மத்திய, மாநில அரசுகள் அழித்து வருகின்றன.

இதுதொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, மத்திய வனத்துறை அமைச்சகம் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, அரசின் அனுமதிப்பெற்று வெட்டப்பட்டுள்ள மரங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில்,   கடந்த 2014-15ம் ஆண்டு, 2334319 மரங்களும், 2015-16ம் ஆண்டு 1696917 மரங்களும், 2016-17ம் ஆண்டில் 1701416 மரங்களும், 2017-18ம் ஆண்டில் 2552164 மரங்களும்,  2018-19ம் ஆண்டில் 2691028 மரங்களும் வெட்டப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார்  1,09,75,844 (1கோடியே, 9 லட்சத்து 75ஆயிரத்த 844 மரங்கள் அனுமதிப் பெற்று வெட்டப்பட்டுள்ளது என்று  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு அனுமதிப்பெற்று மட்டுமே இவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டிருந்தால், அனுமதி பெறாமல் எத்தனை கோடி மரங்கள் வெட்டிப்பட்டிருக்கும்…..?

More articles

Latest article