டெல்லி: கடந்த 10 மாதங்களில்  1.83 லட்சம் இந்தியர்கள்  குடியுரிமையை கைவிட்டுள்ளதாக என மக்களவையில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கு மற்றும் படிப்பு மற்றும் பணியின் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அந்நாட்டு குடியுரிமை பெற்று  அங்கேயே தங்கிவிடுகின்றனர். இதனால், அவர்களில் பலர் தங்களது இந்திய குடியுரிமையை கைவிடுகின்றனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்,  ஆன்லைனில் விண்ணப்பிப்பது தங்களது குடியுரிமை கைவிடுவதை மத்திய அரசு எளிதாக்கியுள்ளது.

அதன்படி கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் மத்தியஅரசு மக்களவையில் தெரிவித்த தகவலின்படி, கடந்த 7ஆண்டுகளில் 8லட்சத்து 81ஆயிரம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என அறிவித்தது.

இந்த நிலையில், 2022ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் மட்டும்,  1.83 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர் என மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு டிசம்பர் 9ந்தேதி அன்று மத்தியஅரசு பதில் அளித்தள்ளது.

இந்திய குடியுரிமை வேண்டாம் என்று கைவிடுபர்களுக்கு எளிதான நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது

கடந்த 7ஆண்டுகளில் 8லட்சத்து 81ஆயிரம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்! நாடாளுமன்றத்தில் தகவல்…