டெல்லி: கடந்த 7ஆண்டுகளில் 8லட்சத்து 81ஆயிரம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய விவாதத்தின்போது  உறுப்பினரின் கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த பதிலில் செப்டம்பர் 30ந்தேதி வரையிலான கடந்த 7 ஆண்டுகளில் 8,81,254 பேர் தங்களது இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2017 முதல் 2021ஆம் ஆண்டு காலகட்டம் வரை சுமார் 6று லட்சம் இந்தியர்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 8லட்சத்து 81ஆயிரம் பேர்  இந்திய குடியுரிமையை வேண்டாம் என தெரிவித்து உள்ளனர்.

கடந்த 5ஆண்டுகளில் 6லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்! நாடாளுமன்றத்தில் தகவல்…