இமாசலப் பிரதேச தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர்கள் 8 ல் 7 பேர் கோடிஸ்வரர்கள்

Must read

சிம்லா

வேட்பாளர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் மூலம் இமாசல பிரதேச காங்கிரஸ் வேட்பாளர்கள் 8ல் 7 பேர் கோடிக்கணக்கான சொத்துக்களை உடையவர்கள் என தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் நடை பெற உள்ள இமாசலப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை அனைத்துக் கட்சியினரும் தாக்கல் செய்துள்ளனர்.   அவர்களின் வேட்பு மனுக்களில் கொடுக்கப்பட்ட விவரங்களைப் பொறுத்து பல தகவல்கள் வெளியாகி உள்ளது.   அவைகள் பின் வருமாறு.

வேட்பாளர்கள் வயது குறைந்தது 25ஆகவும், அதிக பட்சம் 80க்கு மேலும் உள்ளது.  41 வயதிலிருந்து 70 வயது வரையிலான வேட்பாளர்கள் 72% உள்ளனர்.  25 முதல் 30 வயதான வேட்பாளர்கள் மொத்தம் 14 பேரும் 71 முதல் 80 வரை உள்ள வேட்பாளர்கள் 15 பேரும்,  83 வயதனாவர் ஒருவரும் களத்தில் உள்ளனர்.

சொத்து மதிப்புகள் தெரிவிக்கப்பட்ட்ட வகையில் காங்கிரஸ் வேட்பாளர் 68 பேரில் 59 பேருக்கு (அதாவது 8ல் 7 பேருக்கு) கோடி ரூபாய்களுக்கு மேல்  சொத்துக்கள் உள்ளது.   பா ஜ க வேட்பாளர்கள் 68 பேரில் 47 பேருக்கு கோடிக்கணக்கில் சொத்துளது.    காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சராசரி சொத்துக்கள் ரூ.8.5 கோடிகள் உள்ள நிலையில் பா ஜ க வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.5.3 கோடிகளாக உள்ளது.

வேட்பாளர்களில் அதிக பணக்காரர் பா ஜ க வைச் சேர்ந்த பல்பீர்சிங் வர்மா ஆவார்.  இவருக்கு ரூ.90 கோடி சொத்துக்கள் உள்ளன. அத்துடன் ரூ.27 கோடிகள் கடனும் உள்ளது.   காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா (முதல்வர் வீர்பத்ர சிங் கின் மகன்) ரூ.84 கோடிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.   இவருடைய கடன் விவரஙக்ள் தெரியவில்லை.

குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் அனைத்துக் கட்சியிலுமாக சேர்ந்து மொத்தம் 31% பேர் உள்ளனர்.    இதில் பா ஜ க வின் வேட்பாளர்கள் 68 பேரில் 23 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது.   காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆறு பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது.    மொத்தம் அளிக்கப்பட்ட 338 மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்த விவரப்படி மேற் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.   இது தவிர சில வேட்பு மனுக்களில் குற்றச்சாட்டு பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படாததால் இந்த எண்ணிக்கை விவரங்கள் தெரிந்தபின் மாறலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

More articles

Latest article