ஸ்கர் போட்டியில் பங்கேற்க இந்திய சார்பில் விசாரணை திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்த படம் விசாரணை 2015ம் ஆண்டு வெளியானது.  இந்தப்படத்தில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
சமுத்திரக்கனி, சரவண சுப்பையா, ராமதாஸ், தயா, செந்தில் என இப்படத்தில் ஆறு இயக்குநர்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ntlrg_160205165652000000
விசாரணை திரைப்படம்  3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. வெனிஸ் திரைப்பட விழா உள்பட பல சர்வதேச அரங்கில் விசாரணை திரைப்படம் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இதையடுத்து ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு விசாரணை திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் ஜீன்ஸ், இந்தியன், குருதிப்புனல், தேவர்மகன், அஞ்சலி, நாயகன், தெய்வ மகன் ஆகிய தமிழ்த்திரைப்படங்கள் ஆஸ்கர் போட்டியில் கலந்துகொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]