சென்னை:

மிழகத்தில் செப்டம்பர் 1ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.  இதை எதிர்த்து தாக்கப்பட்ட வழக்கில், அரசு உத்தரவு செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்த வழக்கில் கடந்த 1ந்தேதி நடைபெற்ற விசாரணயின்போது, வரும் 4ந்தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியது கட்டாயமில்லை என்று ஐகோர்ட்டு கருத்து கூறியிருந்தது.

இந்நிலையில், ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவை ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது. வரும் புதன்கிழமை முதல் வாகன ஓட்டிகள் அசல் உரிமத்தை வைத்திருப்பது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது குறித்து  சென்னை பெருநகர் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 3-ன் படி வாகன ஓட்டிகள் உரிமம் இல்லாமல்  எந்தவொரு நபரும் பொது இடத்தில் வாகனம் ஓட்டக் கூடாது என்பது கட்டாயம்.

எனவே அச்சட்டத்தின்படி, பொது இடத்தில் சீருடையில் உள்ள காவல் துறை அதிகாரி, வாகன ஓடடுநரிடம் , ஓட்டுநர் உரிமத்தை கேட்டால் கண்டிப்பாக வழங்க வேண்டும்.

மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 181- இன்படி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கலாம்.

சாலை பாதுகாப்புக்காக உச்ச நீதிமன்றக் குழு விபத்துக்களை குறைக்கும் வகையில், போக்கு வரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக  நிறுத்தி வைக்கவும் ரத்து செய்யவும் அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியுள்ளது.

எனவே செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகனம் ஓட்டும் போது அனைவரும்  அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வண்டும். அவ்வாறு அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் .

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.