தேனி,

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில்  உள்ள தனக்குச் சொந்தமான பிரச்சினைக்குரிய கிணற்றை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க தயார் என்று ஒபிஎஸ் அறிவித்துள்ளதாக கடந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இன்னும் அதற்கான முழு முயற்சியை ஓபிஎஸ் தரப்பு எடுக்காமல் தாமதப்படுத்தி வருகிறது.

ஒபிஎஸ்சின் இந்த ஏமாற்றும் செயல் காரணமாக அந்த பகுதி மக்கள் மேலும் கொதிப்படைந்து உள்ளனர்.

தேனி மாவட்டம் லெட்சுமிபுரம் அருகே கோம்பை அடி வாரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மற்றும் ஓபிஎஸ்ஸின் நண்பர் சுப்புராஜ் ஆகியோருக்கு சொந்தமான தோட்டத்தில் 200 அடி ஆழ கிணறு உள்ளது. இதன் அருகில் லெட்சுமிபுரம் ஊராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் பொதுக் கிணறும் இருக்கிறது.

இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் கிணற்றை  ஆழப்படுத்தியதால், ஊராட்சியின் குடிநீர் ஆதாரமாக இருந்த கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டதாக கூறி, கிணறை மூட வேண்டும்அப்பகுதி  பொது மக்கள் குற்றம்சாட்டி போராடி வருகின்றனர்.

அதையடுத்து , இருதரப் பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தநிலையில் பேச்சுவார்த்தை யின்போது, பொதுமக்களுக்காக தனது கிணற்றை இலவசமாக வழங்கத் தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டதாக தகவல் கூறப்பட்டது.

அண்மையில் கூட ஓபிஎஸின் கிணறு கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஓபிஎஸ் கிணற்றை தருவதாக கூறி வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனைக் கண்டித்து தொடர் போராட்டங்களிலும் லட்சுமிபுரம் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று குத்து விளக்கு ஏற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இன்று வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஓபிஎஸ் கிணற்றை வழங்கும் வரை தொடந்து போராட்டம் நடைபெறும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ்க்கு எதிரான கிராம மக்களின் தொடர் போராட்டத்தால் லட்சுமிபுரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது

பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் ஓ.பி.எஸ்.சை கண்டித்து மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

தோட்டத்தில் கிணறு வெட்டியதால் குடிநீர் தட்டுப்பாடு எனவும் எனவும் புகார் தெரிவித்துள்ளனர். ஓ.பி.எஸ். கிணற்றை மக்களுக்கு வழங்கக்கோரி இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.