சென்னை,

மிழகத்தையே உலுக்கிய  கிரானைட் முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு  கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவருக்கு  பாதுகாப்பு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை அருகே அரசுக்கு சொந்தமான மற்றும் தனியார் இடங்களில் உள்ள கல் குவாரிகள் அனுமதியின்றி வெட்டி எடுக்கப்படுவதாகவும், இதன் காரணமாக அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்  சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு கள் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 11ந்தேதி  சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதைத்தொடர்ந்து, சகாயம் தலைமையிலான குழுவினர் மதுரை பகுதிகளில் ஆய்வு செய்தனர். மதுரை  மேலூர் அருகே சட்டவிரோதமாக ஏராளமான ஏக்கரில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததால், தமிழக அரசுக்கு 1 லட்ரூசத்து.16 ஆயிரம்  கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று  கடந்த 20‌15-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்‌தில் ஐஏஎஸ் அ‌‌திகாரி சகாயம் தலைமையிலான குழு தனது அறி‌க்கையை தாக்கல் செய்தது.

தற்போது குழுவை சென்னை ஐகோர்ட்டு கலைத்துள்ள நிலையில், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.