சென்னை,

சென்னையில் நேற்று பாரதியஜனதா கட்சியினரின் பேரணி நடைபெற்றது. தமிழக அரசை எதிர்த்து நடைபெற்ற  பேரணிக்கு வெளி மாவட்டங்களில் இருந்து தொண்டர்களை வரவழைத்திருந்தது பாரதியஜனதா.

வெளி மாவட்ட தொண்டர்கள் வந்திருந்த வேனில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில், கோட்டை என்பதற்கு பதிலாக கொட்டை நோக்கி மாபேரும் பேரணி என்று எழுத்துப்பிழைகளுடன் அச்சிடப்பட்டிருந்தது.

இதை கண்ட தமிழ் ஆர்வலர்கள், தமிழிசையின் கட்சியின் தமிழுக்கு பஞ்சமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னையில் நேற்று  நடைபெற்ற பாரதியஜனதா பேரணியில்,  தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் , அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தவும் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பேரணிக்கு வந்த வெளி மாவட்டத்தை சேர்ந்த பல வேன்கள் மற்றும் வாகனங்களில்  ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில் அச்சுப்பிழை எழுத்துப்பிழை மிகுந்து காணப்பட்டது.

இதை பார்த்த சென்னை வாசிகளுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கம் , பாரதியஜனதா கட்சிமீது கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.

தமிழுக்கு பெரும் தொண்டாற்றிய குமரி அனந்தனாரின் அன்புமகள் தமிழிசை என்று இனிமையான தமிழில் பெயரை வைத்துள்ள பாரதியஜனதா கட்சி தலைவர் இருக்கும் கட்சியில் தமிழுக்கு பெரும் இழுக்கு ஏற்பட்டுள்ளது.

நமது கண்ணில் பட்ட ஒரு வேனின் பின்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில்,  கோட்டை நோக்கி மாபெரும் பேரணி என்று போஸ்டரின் அச்சிடுவதற்கு பதிலாக கொட்டை நோக்கி மாபேரும் பேரணி என அச்சிடப்பட்டிருந்தது.

எதற்கெடுத்தாலும் அன்டி இந்தியன் என்று சொல்லும் ராஜாவிற்கு இது கண்ணில் படவில்லையா…? தமிழை இழிவு படுத்திய பாஜக தொண்டர்களும் அன்டி தமிழர்கள்தானே என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

தமிழுக்கு இசையான தலைவர் இதுபோன்ற எழுத்துப்பிழைகளை ஆமோதிக்கிறாரா? தமிழே சரியாக வாசிக்கவும், எழுதவும் தெரியாதவர்களை கொண்டு கட்சி நடத்தி வரும் பாரதியஜனதா கட்சியினர், தனது கட்சி தொண்டர்களுக்கு முதலில் தமிழை கற்றுக்கொடுப்பது அவசியம்.

தமிழிசை அதற்கான முயற்சியில் ஈடுபடுவார் என்று நம்புவோம்…

என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை…