10ந்தேதி: எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம்!

சென்னை,

ரும் 10ந்தேதி எடப்பாடி தலைமையிலான தமிழக அரசுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு எதிராக சென்னையில் வரும் 10 ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஓபிஎஸ், தமிழகத்தில்,  உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும், நீட் விலக்கு கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
English Summary
OPS team Protest against tamilnadu government on august 10th