சென்னை

முன்னாள் தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாங்கள் பாஜக கூட்டணியில் உள்ளதாக அறிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் முன்னாள் தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம்.

”தொடர்ந்து நாங்களும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து பேசி வருகிறோம். தவிர பாஜகவில் உள்ள மேல்மட்ட தலைவர்களுடன் கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். 

நான் நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை என்பதால் அவரை சந்திக்கவில்லை. 

நடைபெற உள்ளது இந்தியாவை யார் ஆளப்போகிறார்கள் என்பதற்கான தேர்தல். ஆகும் நாங்கல் தேசிய கட்சியாக உள்ள பாஜக தலைமையிலான கூட்டணியில் உள்ளோம்.  

எனவே பொதுக்கூட்டத்திற்கு பாஜக. அழைக்காதது குறித்து எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. நாங்கள் இரு தரப்பினரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.”

என்று கூறி உள்ளார்.