தஞ்சை : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சசிகலாவை  ஓபிஎஸ்.ன் வலதுகரமாக திகழ்ந்து வரும் அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் சந்தித்து பேசினார். சந்திப்பின் போது அவருக்கு சசிகலா அவருக்கு இனிப்பு வழங்கினார்.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் கோர்ட்டு வழக்கு என்று தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, நீதிமன்றத்தின் உத்தரவு எடப்பாடிக்கு சாதகமாக உள்ளதால்,. ஓபிஎஸ் தரப்பினர் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதற்கிடையில், அதிமுகவை தன்வசப்படுத்த சசிகலா ஒருபுறமும், டிடிவி தினகரன் மற்றொரு புறமும், ஓபிஎஸ் தரப்பு வேறொருபுறமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிளவுபட்டுள்ள அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என்று சசிகலா கூறி வருகிறார்.

இந்த பரபரப்பான சூழலில்,  ஓபிஎஸ் நடவடிக்கைக்கு தீவிர ஆதரவாக இருப்பவரும், வலதுகரமாக இருப்பவருமான  முன்னாள் எம்.பி. வைத்தியலிங்கம்  இன்று திடீரென சசிகலாவை சந்தித்து பேசினார்.  அப்போது, சசிகலாவிடம் வைத்திலிங்கம்.  பிறந்த நாள்  வாழ்த்து பெற்றார். அவருக்கு சசிகலா இனிப்பு வழங்கினார்.

 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவரப்பட்டில் திருமண நிகழ்ச்சியில்  இந்த சந்திப்பு நடைபெற்றது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஓபிஎஸ் சசிகலா சந்திப்பு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வைத்தியலிங்கம் சசிகலாவுடன் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.