சென்னை: லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வரும் நடிகர் விஷால் மீதான வழக்கின் இன்றைய விசாரணைக்கு விஷால் ஆஜராகாத நிலையில், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அவருக்கு உயர்நீதி மன்றம்  2 வாரங்கள் அவகாசம் வாங்கி உள்ளது.

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.  இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.  அதற்கு பிரதிபலனாக இரு தரப்புக்கும் இடையே போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தில், நடிகர் விஷயால் கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, அவரிடன் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால், விஷயால், அதை செய்யாமல் டிமிட்டி கொடுத்து வந்தார். இதையடுத்து லைகா நிறுவனம், விஷயால் மீது வழக்கு தொடர்ந்தது.

இநத் வழக்கின் கடந்த விசாரணைகளின்போது,  நடிகர் விஷால் ரூ. 15 கோடியை திமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், விஷால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கைவிரித்தார். அதைத்தொடர்ந்து, விஷாலின் விளக்கத்தையும், சொத்து விவரங்கள் அடங்கிய பிராமண பத்திரத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திக்கப்பட்டது.

அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் ஆஜராகாத நிலையில், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதற்கான அவகாச கோரிக்கையை ஏற்றது சென்னை உயர் நீதிமன்றம். அதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணை செப்டம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  அன்றைய தினமும் நீதிமன்றத்தில் விஷால் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளது.