சென்னை:
ஓ.பி.எஸ்-ன் செயல்பாடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “உசிலம்பட்டி ஐயப்பன் ஓபிஎஸ்-ஐ சந்தித்தது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது. எம்.ஜி.ஆர் தொண்டர்களை நம்பி மட்டுமே கட்சியை தொடங்கினார்
எம்.எல்.ஏ ஒருவர் ஓ பி எஸ் அணிக்கு தாவுவதால் ஒரு பின்னடைவும் இல்லை. பணம் பாதாளம் வரை பாயும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தர்மயுத்தம் தொடங்கி விட்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமே இல்லை என வாக்குமூலம் அளித்தவர் ஓபிஎஸ்.
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் அவரை உண்மையான தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel