சென்னை:

ந்து மாநிலங்களுக்கு நடந்த பொதுத்தேர்தல்களில் உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் பல தொகுதிகளில் பாஜக முன்னணியில் இருக்கிறது.

இதையடுத்து, பாஜகவின் வெற்றிக்காக தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து தெரிவித்துள்ளார். “’பாஜக.,வின் தற்போதைய வெற்றிக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியின் மூலமாக, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது,’’ என்று ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

இது சசிகலா தரப்பை அதிரச் செய்துள்ளது. இந்த அதிர்ச்சிக்கு  இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது,  அதிமுகவின் லெட்டர் பேடில் இந்த வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் ஓ.பி.எஸ்.

இவரை அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், ஜாம் ஜாம் என்று அதிமுக லெட்டர் போடில் வாழ்த்து தெரிவித்த விவகாரம்தான் எதிர் முகாமில் எரிச்சலை கிளப்பியிருக்கிறது.