சென்னை,

திராவிடர்கழகம் சார்பில் ஒருகுலத்துக்கொரு நீதி, மற்றும் பெண்ணடிமையை வலியறுத்தும் மனுதர்மத்தை எரிக்கும் போராட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 இடங்களில் நேற்று நடைபெற்றது.

சென்னையில்  நடைபெற்ற இந்தப்  போராட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி-பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மற்றும் வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி முதலான மாநில, மாவட்ட மகளிர் அணியினர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.