சென்னை,
மிழக முதல்வர் ஓ.பன்னீர்செலவத்தின் நண்பரான தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான விசாரணை வருமான வரித்துறையில் இருந்து அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழக பொதுப்பணித்துறையில் தனியார் ஒப்பந்ததாரராக இருந்த சேகர் ரெட்டி உள்ளிட்ட எட்டு பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் தீடீர் சோதனையில் ஈடுபட்டார்கள்.

இந்த சோதனையின் போது சேகர் ரெட்டியின் வீட்டில் மட்டும் 131 கோடி ரூபாய் பணமும்,127 கிலோ தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு கமிஷன் அடிப்படையில் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றித்தரும் வேலையை சேகர் ரெட்டி செய்து வந்ததும் அம்பலமானது.
வேலூரில் உள்ள சேகர் ரெட்டியின் பூர்வீக வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து கணக்கில் வராத 24 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய இரண்டாயிரம் ரூபாய் தாள்களாக கைப்பற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து வருமானவரித்துறையினர் சேகர் ரெட்டியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிக அளவிலான கருப்புப் பணம் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளது என்பதால்,சேகர் ரெட்டியின் மீதான விசாரணை அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை அடுத்து, திருப்பதி தேவஸ்தான வாரிய உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ஆந்திர அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.