சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான சர்ச்சை குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு காரணமாக, ஓபிஎஸ் தரப்பு மகிழ்ச்சியும் புரளும் நிலை யில், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அவரது ஆதரவாளர்கள் சூழ பொமுக்குழு கூட்டத்துக்கு வருகை தந்தார். அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் ஓபிஎஸ்-சும் தொண்டர்கள் புடைசூழ வருகை தந்த்ர். இன்றைய பொதுக்குழுவில், உயர்நீதி மன்ற அமர்வின் தீர்ப்பை மீறி ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு 10மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் சுமார் 10.30மணி அளவிலேயே ஓபிஎஸ் வருகை தந்தார். அதைத்தொடர்ந்து இபிஎஸ் 11மணிக்கு மேலேயே வருகை தந்தார். இதனால் பொதுக்குழு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்பதால் ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு நடத்தக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் நீதிமன்றம் இதில் தலையிட்டு, 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டு உள்ளது. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமிதான் வேண்டும் என்பதை பொதுக்குழு கூட்டத்தில் முன்வைப்போம் என சில பொதுக்குழு உறுப்பினர்கள் கூறி வருகின்றனர். மேலும், பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானத்திற்கு பதில் வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக தகவல் பொதுக்குழுவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் நீதிமன்றத்தை அணுகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை மீறி ஒற்றை தலைமைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, ஓபிஎஸ்-யின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் பகுதிக்கு தொண்டர்கள் புடை சூழ ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். எடப்பாடி பழனிச்சாமி வாகனம் செல்ல முடியாத அளவில் தொண்டர்கள் கூட்டம் சாலையில் கூடியுள்ளது; தொண்டர்கள் கூட்டத்தில் வாகனம் ஊர்ந்து செல்கிறது. ஓபிஎஸ் அவரது வருகையையொட்டி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் வாழ்க என கோஷம் எழுப்பினர். உடனே இபிஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் வாழ்க என எதிர்கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் பொதுக்குழுவுக்கு வருகை தந்தார். அப்போது ஆதரவாளர்கள் கோஷத்துடன் வந்தார்.
அதிமுக பொதுக்குழு: சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு வேறு தீர்ப்புகள்…