சென்னை: அதிமுக பொதுக்குழு நடைபெறும் நிலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் வருகைப் பதிவேட்டில்  கையெழுத்திடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல பொதுக்குழுவில் ஒற்றை தலைமை மற்றும் இரட்டை தலைமைக்கு ஆதரவாக கோஷம் எழுப்பப்பட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
பொதுக்குழு கூட்டத்துக்கு வருகை தருவதற்கு முன்னதாக ஓபிஎஸ், தனதுவீட்டில் கோ பூஜை நடத்தியதாகவும், எடப்பாடி யாகம் நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுக்குழு 11மணி அளவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி இன்று காலை முதலே பொதுக்குழு உறுப்பினர்கள் அடையாள அட்டை காண்பித்து வருகை தந்துள்ளனர்.  பொதுக்குழுவிற்கு வரும் உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவது நடைமுறை. ஆனால், இன்று  வருகை பதிவேடு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள போதும், எந்த உறுப்பினரும் கையெழுத்திடவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில்,  அதிமுக பொதுக்குழுவில் போலி பாஸ்களுடன் பலர் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  போலி அடையாள அட்டையுடன் வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில், காலை 10.30 மணி அளவிலேயே ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் வருகை தந்துள்ளனர். இதனால் கூட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பொதுக்குழு கூட்டத்தில்,  ஒற்றைத்தலைமை வேண்டும் என ஒரு சாரார் கோஷம் எழுப்பி வருகின்றனர். மற்றொரு சாரார் இரட்டைத்தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தொண்டர்கள் அமைதி காக்க வளர்மதி வேண்டுகோள் விடுத்தார்.
ஒற்றை தலைமை வேண்டும் அதுவும் எடப்பாடி பழனிசாமிதான் வேண்டும் என்பதை பொதுக்குழு கூட்டத்தில் முன்வைப்போம் பல  செயற்குழு உறுப்பினர்கள் கூறி உள்ளனர். மேலும்,  க பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானத்திற்கு பதில் வாக்கெடுப்பு நடத்த உள்ளதாக தகவல் பொதுக்குழுவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் நீதிமன்றத்தை அணுகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம்  அதிமுக தலைமை அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.