சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றக்கோரிய ஓபிஎஸ்-ன் நடவடிக்கை ‘கீழ்த்தரமான செயல்’ என அந்த வழக்கை விசாரிக்கும்  உயர்நீதிமன்றம் நீதிபதி காட்டமாக தெரிவித்து உள்ளார். நாளை பிற்பகல் விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு  நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் நீதித் துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் எனவும் என விமர்சித்த நீதிபதி, தீர்ப்பில் தவறு இருந்தால் மேல் முறையீடு செய்யலாம், திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என விமர்சித்தார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறிய கருத்தைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, கிருஷ்ணன் ராமசாமி ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டலாம் என அனுமதி வழங்கினார். இந்த வழக்கின் தீர்ப்பின்போது ஒபிஎஸ் தரப்பை கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் மீண்டும் உயர்நீதிமன்றத்தை நாடவே உத்தரவிட்டது. இதையடுத்து பொதுக்குழு தொடர்பான வழக்கு ஆகஸ்டு 4ந்தேதி (இன்று) விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், வழக்கை வேறு நீதிபதி மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நேற்று முறையீடு செய்தனர். ஆனால், அதை தலைமைநீதிபதி ஏற்க மறுத்து விட்டார். வேறு அமர்வுக்கு மாற்றுவது குறித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததது. அப்போது, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி முறையிட்டிருந்த ஓபிஎஸ் தரப்புக்கு தனி நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் நடவடிக்கை  நீதித்துறை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் என  கடும் கண்டனம் தெரிவித்ததுடன்,  தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம், திருத்தும் இருந்தால் முறையிட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார்.

தன்னைப்பற்றி தனிப்பட்ட கருத்துக்களை கூறியதால் வேறு நீதிபதிக்கு மாற்ற கோரியதாக ஓபிஎஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றக் கோரிய ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு வழக்குகளை  பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து கோரிக்கையை ஏற்று நாளை பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கின் விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

நீதிபதியின் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பில் மீண்டும் நீதிபதியை மாற்றக்கோரி வலியுறுத்தப்பட்டு உள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றகோரி ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை