திண்டுக்கல்

முன்னாள் தமிழக முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கு என தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் காலமானதால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போதைய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி மட்டுமே போட்டியிடும் நிலையில் அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன. நேற்றி 55 பேர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட் 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.நாளை இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம்

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை. யாருக்கும் ஆதரவில்லை… வாக்களிப்போம். ஆனால் யாருக்கு என்பது ரகசியம்”

என்று தெரிவித்துள்ளது அரசியல் நோக்கர்களிடம் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.