திருவண்ணாமலை

தீப மை பிரசாத பேக்கிங் பணி திருவண்ணாமலை தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டு தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளித்தது. ஏராளமான பக்தர்கள் இந்த மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தி இருந்தனர்.

கோவில் நிர்வாகம் மூலம் அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மையானது ஆருத்ரா தரிசனத்தன்று கோவிலில் நடராஜருக்கு அணிவிக்கப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும். கடந்த 13-ந் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு தீப மை அணிவிக்கப்பட்டது.

கோவில் நிர்வாகம் சார்பில் தீ மை பிரசாதம் பக்தர்களுக்கு வினியோகம் செய்ய பேக்கிங்’ செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  வருகிற 20-ந் தேதி (திங்கள்கிழமை) முதல் வினியோகம் செய்யப்பட உள்ளதால் தீபத்துக்கு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் தங்களிடம் உள்ள டோக்கனை வழங்கி மை பிரசாதத்தை பெற்று கொள்ளலாம் என்று கோவில் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.