சென்னை முழுவதும் பல்வேறு அரசியல்வாதிகளின் விளம்பர பேனர்கள்,ஏராளமாக வைக்கப்பட்டுள்ளன.
சட்டத்துக்குப் புறம்பாக வைக்கப்பட்டிருக்கும் இந்த பேனர்களை அகற்றக் கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் வித்தியாசமான போராட்டத்தை நடத்தி வருகிறது.
இதுபோன்ற ஆக்கிரமிப்பு பேனர்களில் உள்ள அரசியல் தலைவர்கள் வாயில் பிளாஸ்திரி போன்று ஒட்டிவிடுகிறார்கள். அதில், “பலகையை வைத்து பாதையை மறைக்காதே”, “இந்த நடைபாதை மக்களுக்கானது.. உனக்கான விளம்பரத்துக்கு அல்ல” என்ற வாசகங்கள் இருக்கின்றன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் படங்கள் வைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு பேனர்களும் சட்டபஞ்சாயத்தின் பிளாஸ்திரிக்கு தப்பவில்லை.
அவர், “நடைபாதையும் சாலைகளும் பொது மக்கள் பயன்பாட்டுக்காக பொது மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதை அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இப்படிப் பயன்படுத்த அரசியல்வாதிகளுக்கு யார் அனுமதி கொடுத்தது என்று நாக்கை பிடுங்குவது போல அவர்களது (படத்தின்) வாயின் மேலே ஸ்டிக்கர் ஒட்டி விட்டு வந்துள்ளார் எங்கள் உறுப்பினர் ஒருவர். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்.
இதே போல சென்னை முழுவதும் சினம் கொண்ட இளைஞர்கள் களம் இறங்கினால் இந்த ஊழல் பெருச்சாளிகளை தெறித்து ஓட விடலாம்” என்றார் உற்சாகமாக.