வேட்புமனுத்தாக்கல் செய்தார் யஷ்வந்த் சின்ஹா… ராகுல் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு…

Must read

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சிதலைவர்கள் கலந்துகொண்டனர்.

நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், அடுதத குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து, ஆளும் பாஜக கூட்டணி சார்பில் தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளராக திருவுபதி முர்மு அறிவிக்கப்பட்டு, அவர் கடந்த வாரம் வேட்புனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா இன்று தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலரிடம், தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  வேட்புமனு தாக்கலின்போது  அவருடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனர்.

வேட்புமனு இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனது பிரசாரத்தை ஜூன் 28-ஆம் தேதி முதல் யஷ்வந்த் சின்ஹா தொடங்கவிருக்கிறார். சென்னையிலிருந்து அவா் பிரசாரத்தைத் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக பழங்குடியினத்தைச் சோ்ந்த திரெளபதி முா்மு அறிவிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

More articles

Latest article