டெல்லி: மத்தியஅரசு அறிவித்தள்ள அக்னிபாத் திட்டத்தின்படி, விமானப்படைக்கு ஆள்சேர்ப்புக்கான விண்ணப்ப பணிகள் தொடங்கிய நிலை யில்,  கடந்த 3 நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராணுவத்தில் 4ஆண்டுகள் ஒப்பந்த முறையில் சேவையாற்றும் வகையில் ‘அக்னிபாத்’ என்னும் புதிய திட்டத்தை மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  டெல்லி, பீகார்,உத்திர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், தெலுங்கானா, அரியானா போன்ற மாநிலங்கள் இளைஞர்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைடுத்து,  அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர விரும்பும் வீரர்களின் வயது உச்ச வரம்பு 25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேருவோருக்கு அசாம் ரைஃபில் படை பிரிவில் சேர 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து அக்னிபாத் திட்டத்தின்படி ஆள்சேர்ப்பு பணி தொடங்கும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, விமானப்படையில் ஆள்சேர்ப்பு பணிக்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த 3 நாளில், இந்திய விமானப் படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இதற்கான தேர்வு ஜூலை 24ம் தேதியில் இருந்து  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.