டெல்லி: குடியரசு தலைவர் தேர்தல், இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டம்’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்பட  17கட்சிகள் இணைந்து பொதுவேட்பாளரை நிறுத்தியுள்ளனர். யஷ்வந்த் சின்ஹா  இன்று ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் புடை சூழ நாடாளுமன்ற செயலர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத்பவாா், திமுக சார்பில் திருச்சி சிவா,  சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, குடியரசு தலைவர் தேர்தலில், தனி நபரை ஆதரிக்கிறோம் என்றாலும், இது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டம்.

ஆர்எஸ்எஸ்-ன் கோபம் மற்றும் வெறுப்பு சித்தாந்தம் மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளின் கருணை சித்தாந்தமும் ஒன்றாக நிற்கிறது என்று விமர்சித்தார்.