எடப்பாடிக்கு எதிர்ப்பு: இரு அணிகளும் இணையும்! தம்பித்துரை பதிலடி

Must read

மதுரை,

அ.தி.மு.க.வின் 2 அணிகளும் விரைவில் இணையும் என்று சென்னை விமான நிலையத்தில் தம்பித்துரை செய்தியாளர்களிடம் கூறினார்.

நேற்று தமிழக முதல்வர் இரு அணிகளும் இணையாவிட்டாலும் பரவாயில்லை என்று கூறியிருந்த நிலையில், இன்று காலை செய்திளார்களிடம் பேசிய அதிமுகவின் எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை இரு அணிகளும் விரைவில் இணையும் என்று கூறினார்.

அதிமுவின் இருஅணிகளும் விரைவில் இணையும் என்று, இரு அணியை சேர்ந்த மூத்த தலைவர்களும் மக்களிடையே குழப்பத்தை விளைவித்து வரும் நிலையில்,

நேற்று சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரு அணிகளும் இணையாவிட்டாலும் பரவாயில்லை என்று பேசியிருந்தார்.

ஆனால், இன்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை பேசும்போதும், தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அ.தி.மு.க. வின் 2 அணிகளும் விரைவில் இணை யும் என தம்பித்துரை கூறினார்.

இன்று மதுரை வந்த தம்பித்துரை செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அ.தி.மு.க.வின் 2 அணிகளும் சேருவதற்கு பன்னீர்செல்வம் எந்த வித கோரிக்கையும் வைக்கவில்லை. அ.தி.மு.க. என்பது மாபெரும் இயக்கம். கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப 2 அணிகளும் விரைவில் இணையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் வறட்சி நிலவும்போது, விவசாயிகள் சொந்த பிரச்சினைக்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தமிழக அரசு  சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்து சென்றுவிட்டார்.

இதன் காரணமாக எடப்பாடிக்கு எதிரான நிலையில் தம்பித்துரை இருப்பது உறுதியாகிறது.

 

More articles

Latest article