டில்லி:

பாஜகவுக்கு எதிராக களமிறங்கி உள்ள எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனவரி 19ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் கொல்கத்தாவில்  நடைபெறும் பிரமாண்ட பேரணியில் எதிர்க்கட்சி தலை வர்கள் அனைவரும் கலந்துகொள்கின்றனர்.

இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

(பைல் படம்)

மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கை காரணமாக மக்கள் பெரும் துயரத் துக்கு ஆளாக்கப்பட்டு வரும் நிலையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சியை பாஜகவிடம் இருந்து கைப்பற்றும் நோக்கில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக  எதிர்க்கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன. இந்த மெகா கூட்டணியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்., இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ் தெலுங்குதேசம், திமுக, ராஷ்ட்ரிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்பட பல மாநில கட்சிகளும் இணைந்துள்ளன.

இந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் முதல்  கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 10ந்தேதி டில்லியில் நடைபெற்றது. அப்போது பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில்  நடைபெற உள்ளது.  அதைத்தொடர்ந்து கல்கத்தாவில் பிரமாண்ட பேரணியும் நடைபெற இருக்கிறது. ஜனவரி 19ந்தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.