சென்னை:

மிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று சந்திக்க உள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதுகுறித்து பேச தமிழக ஆளுநர் நேரம் ஒதுக்கும்படி எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

அதையடுத்து இன்று மதியம் 12.30 மணி அளவில் ஸ்டாலின் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்தது.

இதையடுத்து, இன்று நேற்றுடன் காவிரி உரிமை மீட்பு நடை பயணத்தை முடித்த ஸ்டாலின் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர்களுடன் சென்று கவர்னரை சந்திக்க உள்ளார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான மனுவை அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.