a
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்  தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் கட்சிகளும், தங்களுக்கு சாதகமான கணிப்புகளை வரவேற்றும், பாதகமானவற்றை கடுமையாக விமர்சித்தும் வருகின்றன.
ஆனால் கருத்துக்கணிப்புகள் எந்த அளவுக்கு சரியாக இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் எந்த கட்சி எத்தனை இடத்தில் வெல்லும் அல்லது தோற்கும் என்று பல பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன.
தேர்தல் முடிவோடு அவை எந்த அளவு ஒத்துப்போயின?
முதலில் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகளைப் பார்ப்போம்.
மொத்த தொகுதிகள் : 39
அதிமுக : 37
திமுக. : 00
பாஜக. : 01
பாமக. : 01
இனி, இந்தத் தேர்தலுக்கு முன்னதாக பத்திரிகைகள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகளை பார்ப்போம்.
‪#‎குமுதம் ரிப்போர்ட்டர்:
அதிமுக 20
திமுக. 05
பாஜக. 03
காங் 01
இழுபறி 11
‪‎ஜீ.வி:
அ.தி.மு.க. . 15
தி.மு.க. 14
பா.ஜ.க  11
நக்கீரன்
அ.தி.மு.க. 15
தி.மு.க.BJP. 02
காங்கிரஸ்  01
‪இந்தியா டுடே:
அ.தி.மு.க.. 20-24
தி.மு.க. 09-13
பாஜக. 04-06
‪#துக்ளக்:
அ.தி.மு.க.. 20
தி.மு.க. 01
பாஜக . 04
‎தினத்தந்தி டி.வி:
அ.தி.மு.க.. 18
தி.மு..க.  08
பா.ஜ.க.. 05
என்.டி.டி.வி.
அ.தி.மு.க.. 22
தி.மு.க.  14
பாஜக  03
‪டைம்ஸ் நௌ:
அ.தி.மு.க. 27
தி.மு.க. 06
பாஜக . 03
காங்கிரஸ் . 01
கம்யூ  02
சி.என்.என். டிவி
அ.தி.மு.க. 15-21
தி.மு.க.  10-16
பாஜக. . 06-10
ஆக இவை எதுவுமே சரியான கருத்துக்கணிப்பு இல்லை. இன்னும் சொல்லப்போனால் கருத்துக்கணிப்பு அப்படியே பலிப்பது காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்.
ஒவ்வொரு தேர்தலிலும் இது நிரூபிக்கப்பட்டாலும், கருத்துக்கணிப்பு மீதான கவர்ச்சி மட்டும் குறையவில்லை.
இதற்கு ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் மட்டும் காரணமல்ல. கருத்துக்கணிப்பை ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் மக்களும் காரணம்.