ஓபிஎஸ் எஸ்கேப்! ஸ்டாலின் காட்டம்!

Must read

சென்னை,
மிழக நிதி அமைச்சரை காண ஸ்டாலின் தலைமை செயலகம் வந்தார். ஆனால் ஓபிஎஸ் தலைமை செயலகம் வராமல் ஏமாற்றினார். இதனால் ஸ்டாலின் காட்டமானார்.
இன்று காலை  நிதிஅமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை பார்க்க தலைமை செயலகம் வந்தார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். ஆனால் ஓபிஎஸ் இன்று தலைமைசெயலகம் வரவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த ஸ்டாலின், பொறுப்பு அமைச்சருக்கு பொறுப்பிருக்கா என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
 
இன்று காலை தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்,   நிதியமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்திக்க  தலைமைச் செயலகத்திற்கு வந்தார்.
காலை 10:45மணிக்கு வந்த ஸ்டாலின் நிதி அமைச்சர் ஓபிஎஸ் வருகைக்காக திமுக எம்எல்ஏக்கள் அறையில் காத்திருந்தார். சுமார் 45 நிமிட நேரம் ஓபிஎஸ்-சுக்காக ஸ்டாலின் காந்திருந்தும் ஓபிஎஸ் தலைமை செயலகம் வருவதை தவிர்த்தார். இதன் காரணமாக ஸ்டாலின் ஏமாற்றமடைந்தார்.
இதனால் தன்னுடன் வந்த திமுக எம்.எல்.ஏக்கள் மா.சுப்பிரமணியம் மற்றும் சேகர்பாபு ஆகியோருடன் சட்டப் பேரவை செயலாளர் மற்றும் நிதியமைச்சர் அலுவலகத்திற்கு சென்று கடிதம் மற்றும் அனைத்துகட்சி கூட்டத் தீர்மான நகல்களை வழங்கினார்.
stalin_meet1
வெளியே வந்த ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழக சட்டசபை செயல்பாடுகளுக்காக அமைக்கப்பட வேண்டிய அலுவல் ஆய்வுக்குழு, பேரவைக்குழு, பொது நிர்வாகக்குழு உள்ளிட்ட 12 குழுக்கள் கடந்த 5 மாதங்களாக அமைக்கப்படாமல் உள்ளது,
இந்த குழுக்கள் உடனடியாக அமைக்கப்படாவிட்டால், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டி வரும் என்றும் ஸ்டாலின் கூறினார்..
மேலும், இந்த  குழுக்கள் அமைப்பது தொடர்பாக கவர்னரிடம் விரைவில் மனு அளிக்கவுள்ளதாகவும் கூறினார்.
காவிரி விவகாரம் தொடர்பாக 25ம் தேதி திமுக கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்த்தின் தீர்மான நகலை நிதியமைச்சர் இல்லாத காரணத்தால் அவரது அறையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஓபிஎஸ் தலைமை செயலகம் வராததால் கடுப்பான ஸ்டாலின், பொறுப்பான அமைச்சருக்கு பொறுப்பிருக்கா? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
 

More articles

Latest article