ஊட்டி

மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 22 ஆம் தேதி முதல் மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை இயக்கப்படாமல் இருந்தது. பிறகு பாதை சரிசெய்யப்பட்டு இன்று முதல் மலை ரயில் சேவை தொடங்க இருந்தது.

தற்போது மேட்டுப்பாளையம் பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. எனவே கன மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.