ட்டி

ட்டியில் மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

கோடை வாசஸ்தலமான ஊட்டிக்குச் செல்ல பலரும் விரும்பும் ஒரு போக்குவரத்து சாதனம் ஊட்டி மலை ரயில் ஆகும்.  இந்த ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை மலைப்பாதையில் செல்வதால் இங்குள்ள இயற்கை காட்சிகளைக் கண்டு களிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் இந்த மலை ரயில் பயணத்தை மிகவும் விரும்புகின்றனர்.

இன்று இந்த ஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.   இந்த மலை ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி உள்ளது.  ஓட்டுநர் உடனடியாக நிறுத்தியதால் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தப்பித்துள்ளனர்.

இந்த விபத்து ஊட்டியில் இருந்து வரும் போது குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்ற போது ஏற்பட்டுள்ளது.  இந்த ரயிலின் பெட்டி தண்டவாளத்தில் இருந்து இறங்கியதால் அதைச் சரி செய்யும் பணி நடந்து வருகிறது.  இதையொட்டி இந்த பாதையில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.