ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை: பாதியை விழுங்கும் மோடி அரசு

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

7th pay featured
நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த நிதிநிலையறிக்கை-2016ல், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை செயல்படுத்த 70,000 கோடியை ஒதுக்கியிருந்தார். இந்த ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை செயல்படுத்த 1.02 லட்சம் கோடி தேவைப்படும். இதன் மூலம், 47 லட்சம் அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவார்கள்.
நிதிப்பற்றாக்குறையைப் போக்க, ஊதிய உயர்வில், பாதியை மட்டும் கையில் பணமாகக் கொடுத்து விட்டு, மீதியை, முதலீடு எனும் பெயரில், வசூலித்துவிடத் தீர்மானித்துள்ளது. “பாண்டு” பத்திரங்கள் வழங்க முடிவுச்செய்துள்ளது.
13-1436763266-money7354-600
ஊழியர்களை முதலீடு செய்ய ஊக்கப்படுத்தும் விதமாக, கவர்ச்சிகரமான திட்டங்களை முன்மொழியவுள்ளது. அதிகமான வட்டி, ஊக்கத்தொகை, வரிச் சலுகை என வாரிவழங்கி, முதலீடுகளை ஈர்த்து, பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்த மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
bond money
ஏழவது ஊதியக் குழு பரிந்துரையின் படி கிடைக்க உள்ள ஊதிய உயர்வு பணத்தினைக் கொண்டு  வீடு கட்டலாம், குழந்தையின் திருமணச்செலவினை மேற்கொள்ளலாம் என்றிருந்த மத்திய வர்க்கத்தினரின் கனவைக் கலைக்க வுள்ளது  மத்திய அரசு.

More articles

Latest article