டில்லி

மத்திய அரசு அறிவித்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை 5 மாநிலங்கள் மட்டுமே அமல்படுத்தி உள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தைக் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.    இந்த சட்டத்தில் பல போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதங்கள் கிட்டத்தட்ட 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.   இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அத்துடன் பல மாநில அரசுகளும் இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் பல திருத்தங்களை அறிவிக்கக் கோரி மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளன.   இது குறித்து ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரி ஒருவர், “தற்போது பல மநில அரசுகள் இந்த அபராதத்தைக் குறைத்து புதிய அபராத விவரங்களை மத்திய அரசுக்கு அளித்துள்ளன.   இவற்றை மத்திய அரசு விரைவில் அங்கீகரிக்க வேண்டும்.   இந்த அபராதங்கள் அளவுக்கு மீறி உள்ளன” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எவ்விதஎதிர்ப்ப்பும் தெரிவிக்காமல் குஜராத், உத்தரகாண்ட், கேரளா, கர்நாடகா மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன.  பீகாரில் விரைவில் அமல்படுத்தப்படலாம் என  கூறப்படுகிறது.  ஜார்க்கண்ட்  மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் இந்த சட்டத்தை அமல் படுத்த மேலும் மூன்று மாதங்க்ல் ஆகலாம் எஅ தெரிவிக்கப்பட்டுள்ளது.